Welcome to Socio Economic Service Society Matrimony Service, Exclusive Advertising Matrimony Site, Direct Contact and Speedy Settlement of marriages, Online & Offline Services, For Easy & Quick Marriage please call +91 44 2817 0113
Need Help? Call Us at +91 44 2817 0113
Login

ABOUT SOCIO ECONOMIC SERVICE SOCIETY

  1. சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றம் 18-07-1984 அன்று 166/1984 என்ற எண்ணுடன் தமிழ் நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்திற்குட்பட்டு ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டது,

  2. அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கி வருகிறது,

  3. செயற்குழு உறுப்பினர்கள் பயணப்படியோ அமர்வு கட்டணமோ பெறுவதில்லை,

  4. மலர் மாலைகளுக்குப் பதிலாகக் கைத்தறித் துண்டு அணிவிக்கும் முறையைப் பின்பற்றி கைத்தறித் தொழிலுக்கு ஊக்கமளிக்குமாறு உறுப்பினர்களைக் கோரியுள்ளது,

  5. ஒவ்வொரு உறுப்பினருக்கும் துணைவிதிப் புத்தகமும உறுப்பினர் அட்டையும் உலோகச் சின்னமும் அளித்துள்ளது,

  6. உறுப்பினர் ஒருவரையொருவர் அறிந்து எளிதில் தொடர்பு கொள்ள வாயப்பளிக்கும் வகையில் 5784 உறுப்பினர்களின் முகவரிகளடங்கிய கையேடு அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது, உறுப்பினர் எண்ணிக்கை 10,000 ஆனவுடன் இக்கையேடு மேலும் விரிவாக்கப்பட உள்ளது,

  7. திருமணத் தகவல் மையமும் வேலைவாய்ப்புத் தகவல் மையமும் நடத்தி வருகிறது,

  8. திறமைகளை வளர்க்க சித்திரம், மாறுவேடம், பாட்டு, பேச்சு, கட்டுரை சமையல் முதலிய வகைகளில் மண்டல அளவிலும் மாநில அளவிலும் போட்டிகள் நடத்தி வருகிறது,

  9. உறுப்பினர்கள் எழுதிய நூல்கள் சில வெளியிட்டு அந்நூல்களை விற்றுத் தருகிறது, ஒரு சிறிய படிப்பகம் அமைந்துள்ளது,

  10. பதவி உயர்வும் இதர சிறப்புகளும் பெறும் உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழாக்கள் அவ்வப்போது நடத்தி வருகிறது,

  11. உறுப்பினர்களுக்கும் செயற்குழுவுக்கும் ஒரு பாலமாகவும் ஆக்கப்பணிகளை எளிதில் மேற்கொள்ளவும் ஒரு செய்தி இதழ் சந்தாக்கட்டணம் பெறாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 1985 மே மாதம் முதல் அச்சிட்டு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது,

  12. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் நிலை 1985ல் ஏற்பட்டு இதைத் தவிர்க்க நடத்தப்பட்ட மாநாடுகளிலும் பேரணிகளிலும் தொண்டு மன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது,

  13. மருத்துவ முகாம்கள் அவ்வப்போதும் அரக்கோணம் அருகிலுள்ள நாகவேட்டிலும் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் நடத்தி வருகிறது,

  14. சென்னைக்கு அருகாமையில் ஒரு உறுப்பினர் குடியிருப்பு அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது,

  15. சிக்கனத் தமிழ்த் திருமண முறை ஒன்று வகுக்கப்பட்டு சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் மாதிரித் திருமணம் ஒன்றை ஒளி ஒலிப் பதிவு செய்து கேசட் மூலம் பதிந்து இந்த முறையை பரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,

  16. பள்ளிகள் தொடங்க உறுப்பினர்களுக்குத் தூண்டுதல் அளிக்கப்பட்டு வருகிறது,

  17. தொழிற் பட்டப் படிப்புகளில் சேர்க்க அரசால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு எழுத குறுகிய கால பயற்சி வகுப்புகள் 1985 முதல் 2005 வரை நடத்தப்பட்டன, 1728 பேர் சேரப் பயிற்சி பெற்றனர். நமக்கு கிடைத்துள்ள விவரப்படி 1103 பேர் தேர்வு பெற்றனர், இவர்களில் மருத்துவர் 212 பேர், பொறியியல் 763 பேர் மற்றவர்கள் 128 பேர் இவர்களில் 274 பேர் மாணாக்கியர்.

  18. தொழிற் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு எழுதத் தேர்வுப் பெற +2 தேர்விலேயே அதிக மதிப்பெண் பெறுவது அவசியமாதலால் +2 தேர்வுஎழுத பயிற்சி வகுப்புகள் 1986 முதல் 2004 வரை நடத்தப்பட்டன இம்மாதிரி பயிற்சி வகுப்புகள் அந்தந்தப் பள்ளிகளிலேயே நடத்தப்படுவதால் நமது பயிற்சி வகுப்புக்கு போதிய மாணவர் சேர முன்வருவது மிகவும் குறைந்துவிட்டது, எனவே 2005ம் ஆண்டு முதல் நடத்தவது இல்லை என முடிவு எடுக்கப்பட்டது,

  19.  +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்காக முதல் மூன்று நிலை பெறும் இருபால் மாணவர்களுக்கும் உறுப்பினர்களிடம் நன்கொடை பெற்று ரொக்கப் பரிசுகள் 1986ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன,

  20. 1986ம் ஆண்டு முதல் தொழிற் பட்டப் படிப்பு, தொழில் நுட்ப படிப்பு, தொழிற் பயற்சி படிப்பு மாணாக்கர்களுக்கு படிக்கும் படிப்புக்கு ஏற்றவாறு ஆண்டு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன, 2005ம் ஆண்டு இறுதிவரை 1,309 நன்கொடையாளர்களை அடையாளங்கண்டு 1,309 மாணாக்கர்களுக்கு படிப்புதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது,

  21. உறுப்பினர் கட்டணமாகவும், கல்வி மேம்பாட்டு நிதிக்கு நன்கொடையாகவும் பெறும் பணத்தை அரசு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு நடைமுறைச் செலவை ஏற்க முயற்சி செய்யப்படுகிறது, இதுவரை இது தவிர மற்ற வகை நன்கொடைகள் அறக்கட்டளைகள் சேர்த்து 142,50 இலட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது 5,784 உறுப்பினர் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர் இவற்றில் இயற்கை எய்தியவர்களின் உறுப்பினர் பெயர் நீக்கப்பட்டு அவரது உறுப்பினர் கட்டணமான ரு,100/- கல்வி மேம்பாட்டு நிதிக்கு மாற்றப்படுகிறது,

  22. வட ஆற்காடு மண்டலத்தில் அரக்கோணத்தில் இருந்து 7 கி,மீ தொலைவில் உள்ள நாகவேட்டில் 6,78 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அதில் கீழ்தளம் தலா 600 சதுர அடியுள்ள புதியக் கட்டிடத்திறப்பு விழா மற்றும் பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற மருத்துவ முகாம் துவக்க விழா 03,04,2004 அன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது வாராந்திரச் செலவுக்கு ரு,2000 என ந்னகொடை 52 பேரிடம் இருந்து பெறப்பட்டு வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது,
    22, புத்தக வங்கி 21-07-2002 முதல் அமுலுக்கு வந்துள்ளது, இத்திட்டத்தின் படி இதுவரை இரண்டு மருத்துவ மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்,

  23. அறக்கட்டளைகள் மூலம் நன்கொடை பெற்று முதலீடு செய்யும் தொகைகளுக்கு வட்டி விகிதம் மிகவும் குறைந்து விடடதால் (15 ல் இருந்து 8 க்கு) ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட பொது நல நிதி ஏற்படுத்தப்பட்டது இதன் மூலம் நன்கொடைகள் பெற்று அவை முதலீடு செய்யப்பட்டு மேற்படி இழப்பை சரிக்கட்ட இயலூம் எனும் நல்ல நோக்கத்தில் இந்த நிதி ஏற்படுத்தப்பட்டது, 31-12-2005ல் இந்த நிதியில் 12,63 இலட்சம் உள்ளது,

  24. ஆதரவற்றோர்க்கு உதவிட ஆண்டுதோறும் சென்னைியல் அமைந்துள்ள உதவும் கரங்கள் நரிக்குறவர்கள் இல்லம் மற்றும் பால மந்திர் ஆகிய அமைடப்புகளுக்கு தீபாளியை முன்னிட்டு சேலம் வள்ளல் திரு, இராமசாமி 1500 மீட்டர் துணிகளும் திரு, சிவப்பிரகாசம் பத்து போர்வைகளும் மற்றும் சில உறுப்பினர்களிடமிருந்து ந்னகொடை பெற்று அரிசி, பருப்பு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன,

  25. சுனாமி பேரழிவு நிவாரண நிதி ஏற்படுத்தப்பட்டு 06,01,2005 அன்று சென்னை பெசன்ட் நகர் அருகிலுள்ள ஊரூர் ஆல்காட்குப்பம் என்ற இடத்தில் 200 குடும்பங்களுக்கு தலா 500- மதிப்புள்ள பொருட்கள் கொண்ட பை ஒன்று என மொத்தம் ருபாய் ஒரு இலட்சத்திற்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன,

  26. திருமணத் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு பலர் பயனடைந்து வருகின்றனர், இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக இளவில் உயர்நது வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்,

  27. வேலைவாய்ப்புத் தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தோர் எண்ணிக்கை 184 ஆகும். உறவுத் தொடிலதிபர்கள் இம்மையத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு அளித்து ஆதரிக்கலாம்,

  28. தொண்டு மன்றத்திலிருந்து படிப்புதவி பெற்றவர்களிடமிருந்து இன்றைய நிலையை கண்டறிய முயற்சிகள் மேற்கொண்டதன் பலனாக சிலர் படிப்புதவி அறக்கட்டளைகள் மற்றும் படிப்புதவி ஆண்டு நன்கொடைகள் உதவியுள்ளனர்,